Shared--முடி திருத்துதல் மற்றும் முக க்ஷவரம் செய்ய உகந்த நாட்கள் :
திங்கள் ( புத்ரன் உள்ளவர்கள் செய்யக்கூடாது ),
புதன், வெள்ளிக் கிழமை,
வியாழக் கிழமை ( மாணவர்கள் செய்யக் கூடாது )
உகந்த நக்ஷத்ரங்கள் :
அஸ்வினி, ம்ருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி
தவிர்க்க வேண்டிய திதிகள் :
ப்ரதமை, சதுர்த்தி, ஷஷ்டி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாஸ்யை, மாத சங்கராந்தி, ச்ரார்த்த தினம், பித்ரு/ மஹாளய பக்ஷம், மனைவி கர்ப்பிணியாய் இருந்தால், வ்ரத தினங்கள் (ஏகாதசி முதலிய வ்ரத தினங்களில்)
தவிர்க்க வேண்டிய யோகங்கள் :
வ்யதீபாதம், வைத்ருதி
தவிர்க்க வேண்டிய கரணம் :
விஷ்டி (பத்ரை).
தவிர்க்க வேண்டிய கூடுதல் விதிகள் :
1. ஜன்ம நக்ஷத்ரம் / ஜன்ம மாதத்தில் முடி திருத்தம் / முக க்ஷவரம் செய்து கொள்ளக் கூடாது. ஒவ்வொரு மாதமும் வரும் ஜன்ம நக்ஷத்ரத்தில் முடி திருத்தம் / முக க்ஷவரம் செய்து கொள்ளக் கூடாது.
2. எண்ணெய் ஸ்நானத்திற்கு முன்போ, பிறகோ முடி திருத்துதல் கூடாது.
3. உணவு உண்டபிறகு கூடாது.
4. ப்ரயாணத்திற்கு முன் கூடாது.
5. ஸூர்ய அஸ்தமனத்திற்கு பிறகு கூடாது.
6. ஸந்த்யா காலத்தின் போது கூடாது. (ஸூர்ய உதயம் , அஸ்தமனத்திற்கு 48 நிமிடங்களுக்கு முன்)
7. ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் கூடாது.
8. தாமாக முடிதிருத்துதலோ, முக க்ஷவரமோ செய்து கொள்ளுதல் கூடாது. நாவிதர் உதவியோடு தான் செய்து கொள்ள வேண்டும்.
9. முடி திருத்தம் / முக க்ஷவரம் செய்து கொண்ட பிறகு ஸ்நானம் செய்யாமல் மற்ற கார்யங்களில் ஈடுபடக் கூடாது.
10. தந்தை-மகன், சகோதரர்கள் சேர்ந்து ஒரே தினத்தில் முடி திருத்தம் செய்து கொள்ளக்கூடாது.
சில சிறப்பு சாஸ்த்ர விஷயங்கள் :
முடி திருத்தம் / முக க்ஷவரம் செய்து கொள்ளும் போது யக்ஞோபவீதம்/பூணூல் இவற்றை மாலையாக தரித்து கொள்ள வேண்டும்.
முடி திருத்தம் / முக க்ஷவரம் செய்து கொள்ளும் போது, முதலில் வலது பக்கம் உள்ள தாடியை அகற்றிய பின், இடது பக்கம் உள்ள தாடியை அகற்ற வேண்டும். பிறகு மீசை மற்றும் கக்கத்தில் உள்ள உரோமங்களை அகற்ற வேண்டும். அதன்பிறகு தலைமுடி திருத்தம் செய்ய வேண்டும். இறுதியாக நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும். சரீரத்தில் உள்ள உரோமங்களை வலது பக்கம் அகற்றிய பின் இடது பக்கம் அகற்ற வேண்டும். நகங்களை மற்ற நாட்களில் வெட்டக்கூடாது.
No comments:
Post a Comment