திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை செய்த பொதுநலன்கள் என்ன? ஆட்சிக்கு வந்தே ஒரு வருடம்தான் ஆகிறது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) இனி கருணாநிதி சாலை என்று அழைக்கப்படும்.
சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும்.
கருணாநிதி பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும்.
கருணாநிதி சிலை 3 டன் களிமண்,
2 டன் வெண்கலத்தோடு தமிழகத்தின் மிக பிரமாண்ட உலோகச் சிலையாக அமைக்கப்படும்.
ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும்.
சென்னையில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.56 கோடி செலவில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும்.
திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டும்.
சென்னை காமராஜர் சாலையில்
2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்.
மதுரையில் கருணாநிதி பெயரில் ஒரு பிரமாண்டமான நூலகம் ரூ. 70 கோடி மதிப்பில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்குக் கருணாநிதியின் பெயர் வைக்க அரசு சார்பில் ஆலோசனை.
இதுவரை வந்த அறிவிப்புகள் மட்டுமில்லாது இன்னும் பல்வேறு அறிவிப்புகள் கருணாநிதியின் பெயரில் வெளிவரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து திமுக இதுவரை என்ன செய்தது என்று இனியேனும் யாரும் கேட்காதீர்கள்.
🫣🫣🫣😡😡
No comments:
Post a Comment