"மாநில அரசுகளை வரியை குறைக்க கோருவது நியாயமற்றது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் வரியை மேலும் குறைக்க வேண்டும்" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
"பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை. புரிந்துகொள்ளும் பக்குவமும் இல்லை. அதனால் தவறான பொய்த் தகவல்களை பரப்பி வருகின்றனர்” - அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
நிறைய பேர் ஓயாமல் பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மத்திய பாஜக அரசின் மீது பழி சுமத்தி வருகின்றனர்.
அதனால்
"இந்த வெங்காயத்தையும் உறிக்க வேண்டியது நமது கடமை, அதனால் வாங்க உறிப்போம்."
நமது நாட்டின் ஒவ்வொரு நாள் தேவை என்ன, எண்ணெய் விலையை பாதிக்கும் நிகழ்கால வருங்கால பிரச்சினைகள், உலக நடப்பினை கருத்தில் கொண்டு
உலக நாடுகளில் எங்கே நமது தேவைக்குரிய கச்சா எண்ணெய், விலை மலிவாக கிடைக்கும் என்று தேடி தேடி பேரம் பேசி கோடிக்கணக்கான பேரல்களை கொள்முதல் செய்து,
அவற்றை வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வந்து
ரயில்கள் மூலமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள சேமிப்பு மையங்களுக்கு கொண்டு சென்று சேர்த்து
அங்கிருந்து சுத்திகரிப்பு மையங்களுக்கு டெலிவரி செய்து
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய், நாப்தா, தார், எரிவாயு என பல பரிணாமங்களில் பயன்படுத்து பொருளாக பெற்று
ராட்சத சேமிப்பு மையங்களுக்கு கொண்டு சென்று சேமித்து,
அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல், டீசல் ரீடெய்லர்களுக்கு ஒவ்வொரு நாளும் தங்கு தடையின்றி கோடிக்கணக்கான லிட்டர் எரிபொருள்களை விரைந்து சப்ளை செய்வது வரை
இதற்கான போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு, பெட்ரோல் டீசல் விற்பனை மையங்கள் கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் ஒழுங்குமுறை,
என அனைத்து பொறுப்புகளையும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சிரமேற்கொண்டு ஓய்வின்றி செயல்பட்டு வருகிறது.
சர்வதேச நிலவரப்படி பெட்ரோல் டீசல் அடிப்படை விலை நிர்ணயம் செய்ப்பட்டு
அதனுடன் போக்குவரத்து மற்றும் டீலர்களுக்கு தரப்படும் கமிஷன் போன்ற நேரடி செலவுகள் சேர்கிறது.
இதனுடன் இறக்குமதி வரியும்
பெட்ரோல் டீசல் பயன்பாடுகளால் ஏற்படக்கூடிய சுற்று சூழல் மாசுபாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து மேம்பாட்டு வசதிகளை செய்வதற்காக மத்திய அரசு விதிக்கும் வரிகளும் சேர்கிறது.
அப்படி வரும் போது
இன்றைய நிலவரப்படி
பெட்ரோல் விலை போக்குவரத்து செலவுகளுடன் 57.35 ரூபாய்
மத்திய அரசு வரி 19.90 ரூபாய்
டீலர் கமிஷன் : 3.78 ரூபாய்
ஆக மொத்தம் 81.03 ரூபாய்.
ஆனால் சென்னையில் இன்றைய
விற்பனை விலை 102.59 ரூபாய்.
விலையில் ஏன் இவ்வளவு வித்தியாசம்?
ஏனெனில்
மாநில அரசு தனியாக வாட் வரி வசூல் செய்கிறது. இது அந்தந்த மாநில அரசுகள் தங்களது செலவினங்களை சமாளிக்க வசூலிக்கும் வரி. இதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.
ஆனால் வசூலிக்கும் தொகை தான் மிக மிக அதிகம்,
தமிழகத்தில் 21.56 ரூபாய்(வாட் 13% + 11.52ரூ).
அதாவது தேவைகள், உலக நடப்புகள், பருவகால மாற்றங்கள், எதிர் கால தேவைகள் பற்றிய ஆய்வுகள், பேரம், கொள்முதல், இறக்குமதி, சேமிப்பு, சுத்திகரிப்பு, சேமிப்பு மையங்கள், விற்பனை மையங்களுக்கு சப்ளை
மற்றும்
நூற்றி முப்பது கோடி மக்களுக்கான நெடுஞ்சாலை பணிகள், சுற்றுச்சூழல் மேம்பாடு
மற்றும்
எரிபொருள் துறையில் நாடு முழுவதும் நேரடியாக நாற்பதாயிரம் ஊழியர்கள் சம்பளம்,பராமரிப்பு மற்றும் மறைமுகமாக இருபது லட்சம் வேலைவாய்ப்புகள்
மற்றும் நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை மையங்கள் அமைப்பு மற்றும் பராமரிப்பு மேற்பார்வை
என அனைத்து வேலைகளையும் சிரமேற்கொண்டு செய்து வரும் மத்திய மோடி அரசு
மக்களின் நலனில் அக்கறை கொண்டு இரண்டு முறை மாபெரும் வரி குறைப்பு செய்துள்ளது.
ஆனால் இந்த கடுமையான தினசரி வேலைகளில் எந்த பங்களிப்பும் செய்யாமல்
மத்திய அரசின் உழைப்பை பயன்படுத்தி மாநில அரசு நோகாமல் வசூலிக்கும் மொத்த வரி
லிட்டருக்கு 21.56 ரூபாய்.
இதுதான் விஷயம் மக்களே.
ஆனால் இப்படி நோகாமல் வசூலிக்கும் வரியை பற்றி மட்டும் மாநில நிதியமைச்சரும், மாநில ஆட்சியாளர்களும் வாயையே திறக்க மாட்டார்கள். காரணம் வேலையே செய்யாமல் மொத்தமாக வரும் பெரும் தொகை.
"தமிழக அரசு வரி குறைப்பு செய்யாமல்,
மத்திய அரசு விலை குறைப்பு செய்வதால் மட்டுமே தமிழக அரசிற்கு 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று சொன்ன தியாகராஜன் தான்,
2021 பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அரசு பெட்ரோல் வருமானத்தில் மாநிலங்களுக்கு லிட்டருக்கு வெறும் ஐம்பது பைசா மட்டும் தருகிறது"
என்று பேசியிருந்தார்.
ஆனால் தற்போது வரி குறைப்பு செய்வதால் மத்திய அரசிற்கு ஏற்படும் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு பற்றி பேச மாட்டார்.
அப்போதும் சரி, இப்போதும் சரி
நிதியமைச்சர் மாநில அரசு வரியால் சம்பாதிக்கும் கொள்ளை லாபம் பற்றி வாயே திறக்க மாட்டார்.
அவர்களை பொருத்தவரை
57.35 +
19.90 +
3.78 +
( ? ) = 102.59
"தமிழக அரசு வசூலிக்கும் வரி லிட்டருக்கு 21.56 ரூபாய் பற்றி மக்களுக்கு தெரியவே கூடாது."
எல்லோரும் 2021-22 ல் எரிபொருள் மூலமாக மத்திய அரசு வரியாக பெற்ற மூன்று லட்சம் கோடி ரூபாய் பற்றி மட்டுமே பேசினார்கள்.
ஆனால் மாநில அரசுகள் தனியாக வசூலித்த 2.70 லட்சம் கோடிகளை பற்றி எந்தவித பேச்சுக்களும் இல்லை.
இதுதான் இவர்களது சாமர்த்தியம்.
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு மொத்த பொறுப்பையும் பழியையும் மத்திய அரசின் தலையில் சுமத்தி விட்டு
இங்கே மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மூலமாக வந்த பல்லாயிரம் கோடி ரூபாய்களை முந்திரி பக்கோடா சாப்பிட்டபடி எண்ணிக் கொண்டு இருப்பார்கள்.
மக்கள் மத்தியில் பெட்ரோல் டீசல் மூலமாக மோடி பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கிறார் என்று மத்திய அரசிற்கு எதிராக அவதூறுகளை விதைத்த படியே இருப்பார்கள்.
மக்களின் அதிருப்திகளை சுமந்த படி மத்திய அரசு
மக்களின் மறுநாள் தேவைகளுக்காக சப்ளை செய்ய வேண்டிய கடமைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.
ஆனால் நோகாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்க்கும் மாநில நிதியமைச்சர் சொல்கிறார்,
"நாங்கள் வரி குறைப்பு செய்ய மாட்டோம், எங்களை விலை குறைப்பு செய்ய சொல்வதில் நியாயம் இல்லை"
என்றதோடு நில்லாமல்
"மேற்கொண்டு மத்திய அரசு வரி குறைப்பு செய்ய வேண்டுமாம்."
இது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.
சொத்து வரியை நூறு சதவீதத்திற்கு மேல் உயர்த்திய 'திராவிட மாடல்' போல.
இதுல
சாரயத்துக்கு 180 மில்லிக்கு பத்து ரூபாய் வீதம் விலையேற்றம் செய்து,
சுமாராக பாட்டிலுக்கு 220 சதவீத வரிவிதிப்பு செய்து வருடம் 36,000 கோடி வரியாக வசூலிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார்
"அண்ணாமலைக்கு புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை, நினைத்ததெல்லாம் பேசுகிறார்" என்று.
நமது மக்களும் வருத்தம் இல்லாமல் 180 மில்லி சாராயத்தை 140 ரூபாய்க்கு மேல் உள்ள விலை கொடுத்து வாங்கி கொண்டு,
1000 மில்லி பெட்ரோலை 105 ரூபாய்க்கு வாங்க மத்திய அரசை திட்டுகிறார்கள்.
மாநில அரசின் சுமைகளை குறைத்து வண்டி ஓட முக்கிய காரணமே பெட்ரோல் டீசல் வாட் வரியும், சாராய வாட் வரியும் தான் என்பதை மறவாதீர்கள்.
இந்த தரவுகள் சரியா தவறா என்று நீங்கள் தாராளமாக செக் செய்து கொள்ளலாம்.
இதெல்லாம் ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்து பார்த்து
பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு யார் காரணம் என்று நீங்களே முடிவுக்கு வாருங்கள் என் மக்களே.
வேண்டுகோள்:
தயவுசெய்து பாஜகவினர் மற்றும் நண்பர்கள் இந்த பதிவினை பெரிய அளவில் பகிருங்கள்.
தேவைப்பட்டால் காப்பி பேஸ்ட் செய்து உங்களது பெயரிலேயே பதிவிட்டு கொள்ளலாம்.
வாய்ப்பு வசதி உள்ள பாஜகவினர் உங்கள் பகுதி நிர்வாகிகளிடம் ஆலோசித்து
இதில் தேவையான பகுதிகளை எடிட் செய்து உங்களது பெயரிலேயே பிட் நோட்டீஸ் வடிவத்தில் மக்களிடம் கொண்டு சேருங்கள்.
இது உங்கள் பதிவு.
நமது நோக்கம் மக்களுக்கு உண்மைகள் புரிய வேண்டும் என்பதே,
குறைந்த பட்சம் பெட்ரோல் டீசலுக்கு பின்னால் இருக்ககூடிய மத்திய அரசின் கடுமையான உழைப்பு, மாநில அரசு வசூலிக்கும் கொள்ளை வரி போன்ற உண்மைகளை தெரிந்து கொண்டு, புரிந்து கொண்ட பிறகாவது மத்திய அரசை மீண்டும் திட்டி குறை சொல்லட்டும்.
ஆனால் மோடியின் அரசு என்றென்றும் மக்களின் அரசு, மக்களுக்கான அரசு என்ற உண்மையை பொய்யாக்க முடியாது.
என்றென்றும் தேச பணியில்
வைரவேல் சுப்பையா
No comments:
Post a Comment