வார்த்தைகளால் விவரிக்க முடியாத தருணம்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது நண்பரது உறவினர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா வால் இறந்துவிட்டார். அவரை தகனம் செய்ய அரசாங்க வாகனம் கிடைப்பதில் தாமதமானதால் அதிகாரிகள் உங்களுக்கு உடனே வேண்டுமானால் தனியார் வாகனத்தை வைத்து கொண்டு செல்லுங்கள் என்றனர். இறந்தவரின் மகன் வேனுக்கு விசாரித்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவரும் கொண்டு செல்ல முன்வரவில்லை. சிலர் மருத்துவமனையில் இருந்து காட்டிற்கு கொண்டு செல்ல இருபதாயிரம் கேட்டனர். இறந்தவரின் மகன் அழுதே விட்டார். ஏழை இறந்தால் அனாதை பிணம்தான் என்று புலம்பினார். இந்த சமயத்தில் முன்பின் தெரியாத ஒருவர் வந்து இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்கள். கவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். பின்னர் நடந்ததுதான் கடவுள் செயல். போன் செய்தவுடன் இவர்களின் விவரங்களை கேட்டு சிறிது நேரத்திலேயே தனியார் வாகனத்தை கொரோனா வழிகாட்டுதல்படி ஏற்பாடு செய்து கொளத்தூர் மயானத்தில் இறக்கிவிட்டனர். அந்த டிரைவரிடம் டிப்ஸ் கொடுத்தாலும் வாங்கவில்லை. ஏற்பாடு செய்தவர்களுக்கு போன் செய்து எவ்வளவு என கேட்டதற்கு இலவசம் என்று அதிர்ச்சி தந்தனர். கண்டிப்பாக குறைந்து ஐந்து அல்லது ஆறு ஆயிரமாவது ஆகியிருக்கும். மீண்டும் கேட்டதற்கு ஒரே வார்தையில் நெகிழ வைத்தனர். இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்றனர். இதில் ஏதோ விசயம் உள்ளது என்று நினைத்து நான் தனியாக சென்று போன் செய்து உங்களால் எப்படி செய்ய முடிகிறது என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். அப்போது அவர்கள் சொன்ன வார்த்தை எனக்கு உத்வேகத்தையும் உற்ச்சாகத்தையும் கொடுத்தது. பிறருக்கு உதவ வேண்டும் என்று தங்களைப் போன்றவர்கள் அளிக்கும் நூறு ரூபாய் கூட அனாதை ப்ரேத சம்ஸ்காரத்திற்கு போக வேண்டும் என்றே நினைக்கிறோம். அதனால்தான் அனைவரும் உள்ளன்புடன் உதவி செய்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை ஏமாற்றக்கூடாது என்று உறுதியாக இருப்பதால் நிறைய பேர் உதவியுடன் இந்த ஜீவாத்ம கைங்கர்யம் தமிழகமெங்கும் செய்கிறோம் என்று போனை வைத்தனர். ஏதாவது என் பங்கிற்கு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மீண்டும் போன் செய்தேன். மீண்டும் ஒரு வரியில் முடித்தனர். பேச நேரமில்லை. இணையத்தில் பார்த்து முடிந்தால் நூறு ரூபாய் அனுப்புங்கள் போதும் என்றனர். நிஜமாகவே நான் அவர்கள் எண்ணிற்கு நூறு ரூபாய் அனுப்பினேன். இணையத்தில் பார்த்து சேகரித்த விவரத்தினை பகிர்கிறேன்.
www.mokshadwara.com
9789888713 for Gpay Phone pe BHIM.
தமிழகமெங்கும் இவர்களின் சேவையை பாராட்ட இந்த ஏழைக்கு வார்தையில்லை. முடிந்ததை செய்தேன். முடிந்தால் உதவுங்கள்.
மஹாதேவன்
விஜயலட்சுமிபுரம்
சென்னை
+91 98421 53873
No comments:
Post a Comment