WhatsApp இல் வந்தது:
தெலுங்கில் என்-டிவி என்று ஒரு சேனல் உள்ளது.
நேற்று மதியம் கனிமொழி, கருணாநிதி முதலியோரது திருட்டு நாத்திகத்தை அடித்து நொறுக்கிய ஒலி-ஒளி பரப்பு ஆச்சரியமாக இருந்தது.
கனிமொழி திருமலைக்கு வந்து, வெங்கடாஜலபதியை வணங்கி, தீர்த்தம் சாப்பிட்டு, பிரசாதம் வாங்கிக் கொண்டதுடன்,கோயிலில் கொடுத்த புடவையினையும் பக்தியோடு வாங்கிக் கொண்டார் என்பதையெல்லாம் புட்டு-புட்டு வைத்தது.
பிறகு,கனிமொழி திருச்சியில் கிருஸ்தவ அமைப்புகளால் நடத்தப்பட்ட நாத்திக மாநாட்டில், வெங்கடாஜலபதியை எப்படி கொச்சைபடுத்தி பேசலாம் என்று வெளுத்து வாங்கியது.
கருணாநிதியின் போலித்தனத்தை, சாய்பாபாவைக் கும்பிட்டது, மஞ்சள் துண்டு போட்டது, ராசிக்கல் மோதிரம் போட்டது என்று ஒன்றைக் கூடவிடவில்லை. இவர்களது நோக்கம் தான் என்ன..? இவர்கள் யாரை ஏமாற்ற இதுபோல போலித்தனத்தை அரங்கேற்றுகிறார்கள் என்றும் திமுகவுக்கு சரமாரி கேள்விகளையும் எழுப்பியது.
நிச்சயமாக,இதுவரை எந்த தமிழ் சேனலும் செய்யாததை தெலுங்கு என்-டிவி செய்துள்ளது சந்தோஷமாக இருந்தது !
வீடியோவில்முழு விவரக்களையும் காணலாம்-கேட்கலாம்! https://youtu.be/i8vPinLRVZ8
No comments:
Post a Comment