Murali Seetharaman
"சீட்டு பேரம் படியவில்லை என்றதும் தனியாக நின்று வீரம் காட்டும் சங்கிகள்..."- இப்படி ஒரு விமர்சனம்!
சரி அப்படியே இருக்கட்டும் - பேரம் என்பது மற்றவர்களுக்கு நீங்கள் சொல்வது - அதையே நீங்கள் செய்தால் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு!
ஏதோ ஒண்ணு இருக்கட்டும்!
அதிமுக - பாஜக இரு கட்சிகளுமே கண்ணியமான இரண்டு நண்பர்களாகவே பிரிந்து உள்ளார்கள் - அவரவர் பலத்தை அவரவர் பரிசோதித்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு என்ற புரிதலுடன் பிரிந்துள்ளனர்!
ஆனால் உங்க கேஸ் அப்படியா ஸ்வாமி?
உங்க கட்சி MP யை - அதுவும் சாதாரண MP யா - மோடியை சர்வ சாதாரணமாக சரளமாக வசை பாடும் வீராங்கனையை - "போடி வெளியே"- என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக துரத்தி விடறான்!
அதுவும் எங்கே? அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கரூரில் - அதுவும் அந்தக் கட்சியின் மாவட்ட அலுவலகம் போலக் காட்சி தரும் கட்டிடத்தில் இருந்து!
அதிலும் வீடியோவில் அவர் கூச்சல் போட்டுக் கொண்டே வெளியில் வரும் பகுதி மட்டும் தெரிகிறது - உள்ளே என்ன திட்டு திட்டினானோ தெரியாது!
ஒருமையில் திட்டினார்கள் - வெளியே போ என்றார்கள் என்ற வரையில் பாலிமரில் செய்தி போட்டான்!
திமுகவினரைப் பொருத்தவரை இது அவர்கள் தங்களால் இயன்ற அளவு உச்சபட்ச நாகரிகத்தைக் கடைப்பிடித்துள்ளார்கள் என்று அர்த்தம்! அவர்கள் தங்கள் இயல்பான பாணியில் இறங்கியிருந்தால் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் சோதிமணிக்கும் நடந்திருக்கும்!
எனவே திமுக தங்களுடைய அதிகபட்ச கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தி இந்த மட்டில் சோதிமணியை - "வெளியேற்றி"- உள்ளார்கள் என்றுதான் காங்கிரஸ் புரிந்து கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!
ஆனால் இப்படித் தங்கள் கட்சி MP யை - மரியாதைக்குரிய ஒரு பெண்மணியை- மதிப்புக்குரிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை - நாயை விரட்டுவது போல வெளியே துரத்தியும் - காங்கிரஸ்காரனுக்கு ரோஷம் வராமல் திமுக வீசி எறிகின்ற 4 வார்டு - 5 வார்டுக்கு அறிவாலயத்தில் வண்டி கழுவுபவர்கள் பாஜகவை விமர்சிக்க ஏது யோக்யதை?
பேசிய அளவு எதிர்பார்ப்புக்கு ஏற்ற - இடங்கள் கிடைக்கவில்லை என்றவுடன் கௌரவமாகத் தனித்துப் போட்டியிட முடிவு செய்த பாஜக எங்கே?
பிச்சை போடுவது போல திமுக வீசி எறியும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான வார்டுகளுக்காக - மானம் மரியாதை இழந்து - "அறிவாலயத்தில்" கேட்டை ஆட்டிக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள் எங்கே?
உண்மையில் "ஆட்டுக் குட்டி"- அண்ணாமலை இல்லை - நீங்கதா! கசாப்புக் கடையில் ஒரு ஆட்டை வெட்டிகிட்டு இருப்பான்! அதைப் பார்த்துகிட்டே மரத்தில் கட்டிப் போட்ட இன்னொரு ஆடு - தனக்குப் போட்ட இரண்டு தழையை 'மச், மச்' னு மென்னுக்கிட்டு இருக்கும்!
அதுமாதிரி காங்கிரசை அவமானப் படுத்தினால் கம்யூனிஸ்ட் கண்டுக்க மாட்டான்! கம்யூனிஸ்டை அவமானப் படுத்தினால் விசிக கண்டுக்க மாட்டான்! விசிகவை அவமானப் படுத்தினால் எவனுமே கண்டுக்க மாட்டான்!
அடுத்த வெட்டு தனக்குத்தான் என்று அறியாத ஆடு - போட்ட இரண்டு தழையை திருப்தியா மென்னுகிட்டு இருக்கற மாதிரி - கூட்டணியில் இருந்துகிட்டு...
பாஜக தன்னம்பிக்கையோடு எடுத்த முடிவை விமர்சிக்கறீங்க! POOR FELLOWS!
No comments:
Post a Comment